Learn how to use am, is and are in questions – am, is மற்றும் are ஆகியவற்றைக் கேள்விகளில் எப்படி உபயோகிப்பது? இந்தப் பாடத்தில், am, is மற்றும் are ஆகியவற்றைக் கேள்விகளில் எப்படி உபயோகிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளப்போகிறோம். எளிமையான கேள்வி வாக்கியங்களில் இவற்றை எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.
positive | question | Example |
I am | Am I? | Am I a student? நான் ஒரு மாணவனா? |
He is | Is he? | Is he a student? அவன் ஒரு மாணவனா? |
She is | Is she? | Is she a student? அவள் ஒரு மாணவியா? |
It is | Is it? | Is it a student? அது ஒரு மாணவனா? |
We are | Are we? | Are we students? நாம் (நாங்கள்) மாணவர்களா? |
You are | Are you? | Are you students? நீங்கள் மாணவர்களா? |
They are | Are they? | Are they students? அவர்கள் மாணவர்களா? |