November 2018

Lesson 3 : Learn about Present Continuous

Learn about Present Continuous

– Present Continuous எப்படி உபயோகிப்பது? இப்போது நடந்துகொந்டிருக்கும் ஒரு செயலைக் குறிக்க இந்த Present Continuous பயன்படுகிறது. இதுவும் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான am, is மற்றும் are ஆகியவற்றை உபயோகித்து விளக்கப்படுவதால், நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்வீர்கள். am, is அல்லது are-வுடன் “ing”என்று முடியும் சொற்கள் (உதாரணமாக, coming, going, reading, jumping போன்றவை) சேர்ந்து வருவதே Present Continuous. எளிமையான Present Continuous வாக்கியங்களில் இவற்றை எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.
Example
I am (not) -ing I am not working. நான் வேலை செய்துகொண்டிருக்கவில்லை.
He is (not) -ing Balan is reading a book. பாலன் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறான்.
She is (not) -ing She is not running. அவள் ஓடிகொண்டிருக்கவில்லை.
It is (not) -ing It is not watching. அது கவனித்துக்கொண்டிருக்கவில்லை.
We are (not) -ing We are eating. நாம் (நாங்கள்) சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.
You are (not) -ing You are writing. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.
They are (not) -ing They are listening. அவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
]]>

Lesson 2 : Learn how to use am, is and are in questions

Learn how to use am, is and are in questions – am, is மற்றும் are ஆகியவற்றைக் கேள்விகளில் எப்படி உபயோகிப்பது? இந்தப் பாடத்தில், am, is மற்றும் are ஆகியவற்றைக் கேள்விகளில் எப்படி உபயோகிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளப்போகிறோம். எளிமையான கேள்வி வாக்கியங்களில் இவற்றை எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.

positive question Example
I am Am I? Am I a student? நான் ஒரு மாணவனா?
He is Is he? Is he a student? அவன் ஒரு மாணவனா?
She is Is she? Is she a student? அவள் ஒரு மாணவியா?
It is Is it? Is it a student? அது ஒரு மாணவனா?
We are Are we? Are we students? நாம் (நாங்கள்) மாணவர்களா?
You are Are you? Are you students? நீங்கள் மாணவர்களா?
They are Are they? Are they students? அவர்கள் மாணவர்களா?
“I am” என்றால் “நான்”; “Am I?” என்றால் “நானா?”. I-ஐயும், am-ஐயும் திருப்பிப்போட்டால் அது கேள்வியாகிவிடுகிறது. அவ்வளவுதான்! மேலும் சில கேள்விகள் உதாரணங்களால் கீழே விளக்கப்படுகின்றன. Where is your father? Is he at home? உன் அப்பா எங்கே? அவர் வீட்டில் இருக்கிறாரா? Where are you? நீ எங்கே இருக்கிறாய்? What colour is your shirt? உன் சட்டை என்ன நிறம்? How are your daughters? Are they well? உன் மகள்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா? Who is that boy? Is he your brother? யார் அந்தப் பையன்? அவன் உன் தம்பியா? Why are you angry? ஏன் கோபமாக இருக்கிறாய்?]]>

Lesson 1 : Learn how to use am, is and are

Learn how to use am, is and are

– am, is மற்றும் are ஆகியவற்றை எப்படி உபயோகிப்பது? நமது முதல் பாடம் ஒரு எளிதான, ஆனால், மிகவும் முக்கியமான விதியை விளக்குகிறது. “நான் ஒரு மாணவன்” என்கிற ஒரு உதாரணத்தை எடுத்துகொள்வோம். இதனை ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் “I a student” என்று வருமல்லவா? ஆனால், ஆங்கில இலக்கணப்படி, “I am a student” என்றுதான் எழுத வேண்டும். எனவே, இந்த am தவிற இதற is மற்றும் are எங்கே உபயோகிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கீழேயுள்ள அட்டவணைகள் உங்களுக்கு இதனைத் தெளிவாக்கும்.
Positive | நேர்மறை
Example
I am I am a student. நான் ஒரு மாணவன்.
He is He is a student. அவன் ஒரு மாணவன்.
She is She is a student. அவள் ஒரு மாணவி.
It is It is a student. அது ஒரு மாணவன் .
We are We are students. நாம் (நாங்கள்) மாணவர்கள்.
You are You are students. நீங்கள் மாணவர்கள்.
They are They are students. அவர்கள் மாணவர்கள்.
Negative | எதிர்மறை
Example
I am not I am not a student. நான் ஒரு மாணவன் இல்லை.
He is not He is not a student. அவன் ஒரு மாணவன் இல்லை.
She is not She is not a student. அவள் ஒரு மாணவி இல்லை.
It is not It is not a student. அது ஒரு மாணவன் இல்லை.
We are not We are not students. நாம் (நாங்கள்) மாணவர்கள் இல்லை.
You are not You are not students. நீங்கள் மாணவர்கள் இல்லை.
They are not They are not students. அவர்கள் மாணவர்கள் இல்லை.
தமிழில், எழுவாய்க்கேற்ப, “மாணவன்” என்ற சொல் “மாணவி”, “மாணவர்கள்” என்றெல்லாம் மாறுவது உங்களுக்குத் தெரியும். ஆனால், ஆங்கிலத்தில், இந்தக் குழப்பமே இல்லை. “Student” என்ற சொல் எல்லா வாக்கியங்களிலுமே மாறாமல் அப்படியே இருக்கிறது; மாறுவது am, is அல்லது are மட்டுமே. இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம். I am 15 years old. My sister is 12. எனக்கு 15 வயது. என் தங்கைக்கு 12 வயது. Raman is afraid of snake. ராமனுக்குப் பாம்பென்றால் பயம். It is nine O’clock. இப்போது நேரம் 9 மணி. My brother is very tall. Heis a soldier. என் அண்ணன் மிக உயரமானவன். அவன் ஒரு படைவீரன். Balan and I are good friends. பாலனும், நானும் நல்ல நண்பர்கள். Your books are on the table. உன் புத்தகங்கள் மேஜையில் இருக்கின்றன.]]>

Scroll to Top