Learn how to use am, is and are
– am, is மற்றும் are ஆகியவற்றை எப்படி உபயோகிப்பது?
நமது முதல் பாடம் ஒரு எளிதான, ஆனால், மிகவும் முக்கியமான விதியை விளக்குகிறது. “நான் ஒரு மாணவன்” என்கிற ஒரு உதாரணத்தை எடுத்துகொள்வோம். இதனை ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் “I a student” என்று வருமல்லவா? ஆனால், ஆங்கில இலக்கணப்படி, “I am a student” என்றுதான் எழுத வேண்டும். எனவே, இந்த am தவிற இதற is மற்றும் are எங்கே உபயோகிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கீழேயுள்ள அட்டவணைகள் உங்களுக்கு இதனைத் தெளிவாக்கும்.
Positive | நேர்மறை |
|
|
Example |
I |
am |
I am a student.
நான் ஒரு மாணவன். |
He |
is |
He is a student.
அவன் ஒரு மாணவன். |
She |
is |
She is a student.
அவள் ஒரு மாணவி. |
It |
is |
It is a student.
அது ஒரு மாணவன் . |
We |
are |
We are students.
நாம் (நாங்கள்) மாணவர்கள். |
You |
are |
You are students.
நீங்கள் மாணவர்கள். |
They |
are |
They are students.
அவர்கள் மாணவர்கள். |
Negative | எதிர்மறை |
|
|
Example |
I |
am not |
I am not a student.
நான் ஒரு மாணவன் இல்லை. |
He |
is not |
He is not a student.
அவன் ஒரு மாணவன் இல்லை. |
She |
is not |
She is not a student.
அவள் ஒரு மாணவி இல்லை. |
It |
is not |
It is not a student.
அது ஒரு மாணவன் இல்லை. |
We |
are not |
We are not students.
நாம் (நாங்கள்) மாணவர்கள் இல்லை. |
You |
are not |
You are not students.
நீங்கள் மாணவர்கள் இல்லை. |
They |
are not |
They are not students.
அவர்கள் மாணவர்கள் இல்லை. |
தமிழில், எழுவாய்க்கேற்ப, “மாணவன்” என்ற சொல் “மாணவி”, “மாணவர்கள்” என்றெல்லாம் மாறுவது உங்களுக்குத் தெரியும். ஆனால், ஆங்கிலத்தில், இந்தக் குழப்பமே இல்லை. “Student” என்ற சொல் எல்லா வாக்கியங்களிலுமே மாறாமல் அப்படியே இருக்கிறது; மாறுவது am, is அல்லது are மட்டுமே. இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
I am 15 years old. My sister is 12. எனக்கு 15 வயது. என் தங்கைக்கு 12 வயது.
Raman is afraid of snake. ராமனுக்குப் பாம்பென்றால் பயம்.
It is nine O’clock. இப்போது நேரம் 9 மணி.
My brother is very tall. Heis a soldier. என் அண்ணன் மிக உயரமானவன். அவன் ஒரு படைவீரன்.
Balan and I are good friends. பாலனும், நானும் நல்ல நண்பர்கள்.
Your books are on the table. உன் புத்தகங்கள் மேஜையில் இருக்கின்றன.]]>